தனியார் பல்கலை மாணவனின் மரணத்தின் காரணம்!

Date:

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற விருந்து ஒன்றின் போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஆவார்.

தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் நேற்று (09) இரவு இந்த விருந்தினை நடத்தியிருந்ததுடன், அங்க ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியிருந்தது.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புக்களை வழங்க தயாராகும் சீனா?

அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க...

தையிட்டி விகாரை காணிகள் விரைவில் அளவீடு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை...

விளையாட்டு பொம்மைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழந்தைகளின் பொம்மைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருட்களை கூரியர் சேவைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்