கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

Date:

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜில் கடந்த ஆண்டு மகா கும்​பமேளா நடை​பெற்​றது. இதில் மத்​திய பிரதேச மாநிலம் கார்​கோன் மாவட்​டத்​தைச் சேர்ந்த மோனலிசா, மணி​கள் விற்​பனை செய்​தார். இது தொடர்​பான வீடியோ சமூக ஊடகங்​களில் பரவி மக்​களின் இதயங்​களைக் கவர்ந்​தார்.

இந்​நிலை​யில் மோனலி​சா, பர்​மன் கான் என்பவரை கடந்த மார்ச் 11-ம் தேதி திரு​மணம் செய்து கொண்​டார். இது மதம் கடந்த திரு​மண​மாக பார்க்​கப்​பட்​டாலும், மோனலி​சா​வின் வயது குறித்து புகார் எழுந்​தது.

இந்​நிலை​யில், தேசிய பழங்​குடி​யினர் ஆணை​யம் நடத்​திய விசா​ரணை​யில், திரு​மணத்​தின்​ போது மோனலிசா சட்​டப்​பூர்வ வயதை அடை​யாதவர் (மைனர்) என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, மத்​தி​யப் பிரதேசத்​தின் மகேஷ்வர் காவல் நிலை​யத்​தில் பர்​மன் கான் மீது போக்​சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

மேலும் பார​திய நியாய சன்​ஹிதா (பிஎன்​எஸ்) மற்​றும் எஸ்​சி/எஸ்டி (வன்​கொடுமைத் தடுப்​பு) சட்​டம் உள்​ளிட்ட பல பிரிவு​களின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. என்​சிஎஸ்டி தலை​வர் அந்​தர் சிங் ஆர்யா தலை​மை​யில் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், மோனலிசா ‘பார்த்​தி’ பழங்​குடி​யின சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்​பதும் மருத்​து​வ​மனை பதிவு​களின்​படி, அவர் டிசம்​பர் 30, 2009 அன்று பிறந்​தார் என்​பதும் உறுதி செய்​யப்​பட்​டது. திரு​மணத்​தின் போது அவருக்கு 16 வயது மட்​டுமே ஆகி​யிருந்​தது தெரிய​வந்​துள்​ளது.

மோனலிசா திரு​மணம் கேரளா​வில் உள்ள ஒரு உள்​ளூர் கிராம பஞ்​சா​யத்து அலு​வல​கத்​தில் போலி​யான ஆவணங்​களின் அடிப்​படை​யில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. தம்​ப​தி​யினர் வழங்​கிய ஆதார் விவரங்​களை நம்​பிய​தாக திரு​மணம் நடந்த கோயில்​ நிர்​வாகம்​ தெரி​வித்​துள்​ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புக்களை வழங்க தயாராகும் சீனா?

அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க...

தையிட்டி விகாரை காணிகள் விரைவில் அளவீடு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை...

விளையாட்டு பொம்மைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழந்தைகளின் பொம்மைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருட்களை கூரியர் சேவைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்