வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் – டக்ளஸ் எச்சரிக்கை!

Date:

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் இனங்களுக்கிடையில் மீண்டு முரண்பாடுகளையும் நமிக்கையீனத்தையும் உருவாக்கும் விவகாரமாக இருக்கின்றது என சுட்டிக்காட்டும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இந்த விடயத்தில் ஜனாதிபதி அனுர அதிக கவனம் செலுத்தி தீர்வை கொடுப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிலப்பரபுக்கள் பௌத்த சமயத்துக்குரியது என்றும்
அந்நிலங்களை எல்லையிட்டு விரைவில் வர்த்தமானி அறிவிப்பு செய்யவுள்ளதாகவும் துறைசார் அமைச்சர் நாடாளுமன்றில் அறிவித்து நிலையில் தமிழ் மக்களிடையே அது பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

இன்னிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

வெடுக்குநாறி மலையில் பௌத்த சமயத்துடன் தொடர்புடைய சான்றுகள் அதிகமாக இருப்பதாகவும் அதனடிப்படையில் அந்நிலங்களை பௌத்த சமயத்திற்கானதாக அடையாளமிட்டு வர்த்தமானி அறிவிப்பை அறிவிக்கவுள்ளதாகவும் துறைசார் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த அமைச்சரின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இது இனங்களுக்கிடையில் உண்மையை மறைப்பதாகவும் குறிப்பாக வரலாற்றை மறைப்பதாகவும் இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமையும் என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

முன்பு நாம் ஆட்சியில் இருந்தபோது வர்த்தமானி வெளியிடும் செயற்பாட்டை முன்னெடுக்காத வகையில் கையாண்டு ஒரு சுமூக நிலைக்கு கொண்டுவந்திருந்தோம்.

ஆனால் துரதிஸ்டவசமாக இன்றைய நிலமை அதை முற்றாக மாற்றியமைக்கதாக இருக்கின்றது.

அந்த வகையில் இவ்விடையத்தின் உண்மை நிலையை விளக்கி எவ்வாறான நடவடிக்கை எடுப்பதனூடாக இனங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்ற கருத்தை உள்கடக்கி அனுர ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்ப இருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புக்களை வழங்க தயாராகும் சீனா?

அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க...

தையிட்டி விகாரை காணிகள் விரைவில் அளவீடு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை...

விளையாட்டு பொம்மைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழந்தைகளின் பொம்மைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருட்களை கூரியர் சேவைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்