வவுனியா விபத்தில் ஒருவர் பலி

Date:

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார்.

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார்.

இதன்போது அதே திசையில் பின்னால் சென்ற லொறி ஒன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற உடனேயே, லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு, உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார், விபத்து இடம்பெற்ற விதம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் தப்பியோடிய லொறியின் சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்