காதலியுடன் ஆந்திராவில் பதுங்கியிருந்த சவுக்கு சங்கர் கைது!

Date:

நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு சங்​கரை சென்னை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யான பிரபல யூடியூபர் சவுக்கு சங்​கர் மீது ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் 2 மோசடி வழக்​கு​களைப் பதிவுசெய்து கடந்த டிச.13 அன்று கைது செய்​தனர். அவருக்கு உடல்​நலப் பிரச்​சினை​கள் இருப்​ப​தால் ஜாமீனில் விடுவிக்​கக்​கோரி அவரது தாயார் கமலா தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்​கால நிபந்​தனை ஜாமீன் வழங்​கி​யிருந்​தது.

மார்ச் 25-க்​குப் பிறகு நீதி​மன்​றத்​தில் சரணடைய வேண்​டிய சவுக்கு சங்​கர் தலைமறை​வா​னார். இந்​நிலை​யில் சவுக்கு சங்​கர் தன் மீதான 2 வழக்​கு​களை​யும் சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி எம்​.நிர்​மல்​கு​மார் முன்​பாக நேற்று முன்​தினம் நடந்​தது.

அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்​.​முனியப்​ப​ராஜ், சவுக்கு சங்​கர் தொடர்ந்து தலைமறை​வாக இருந்து வரு​வ​தால் அவரை தலைமறைவு குற்​ற​வாளி​யாக அறி​வித்து சென்னை போலீ​ஸார் தேடி வரு​வ​தாக தெரி​வித்​தார். மேலும் சிபிஐ விசா​ரணை கோரும் 2 வழக்​கு​களி​லும் ஏற்​கெனவே விசா​ரணை முடிக்​கப்​பட்டு குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டு​விட்​ட​தாக​வும் தெரி​வித்​தார். அதைப்​ப​திவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கு விசா​ரணையை வரும் ஏப்​.27-க்கு தள்​ளி​வைத்து உத்​தர​விட்​டுள்​ளார்.

இது ஒரு​புறம் இருக்க தலைமறை​வான சவுக்கு சங்​கரை தனிப்​படை அமைத்து சென்னை போலீ​ஸார் தேடி வந்​தனர். இந்​நிலை​யில், அவர் ஆந்​திர மாநிலத்​தில் உள்ள லாட்ஜ் ஒன்​றில் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, நேற்று அங்கு விரைந்த சென்னை போலீ​ஸார் சவுக்கு சங்​கரை கைது செய்​தனர். அவருடன் தங்​கி​யிருந்த அவரது காதலி மால​தி​யும் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர் இரு​வரை​யும் போலீ​ஸார் சென்னை அழைத்து வந்​தனர். மாலதி மீதும் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரான்ஸில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ் தாயும், மகளும்!

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும்...

அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தைக்காக பாக். தலைநகரில் 2 நாட்கள் விடுமுறை!

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தான்...

பொலிசார் புத்தாண்டு அன்பளிப்புக்களை பெற தடை!

அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதிருத்தல் மற்றும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்