ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

Date:

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று (02) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பானது இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார்.

மேலும், மலையகப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம், வி. இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலர் இச்சந்திந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...

அர்ச்சுனாவின் உளறு வாய்க்கு பெரும் ஆப்பு: நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

தெல்லிப்பளை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில்...

ஈரானின் எஃகு ஆலைகள் இரண்டு செயலிழந்தன

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களின் தொடர்ச்சியான அலைகளால் ஈரானின் இரண்டு மிகப்பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்