ஓமானிலிருந்து அழைத்து வரப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்

Date:

ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை 4.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சலாம் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் அவர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஓமான் பாதுகாப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று உத்தியோகத்தர்கள் ஓமானுக்குச் சென்று, இன்று அவரை நாட்டிற்கு அழைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்