குருக்கள்மட புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்

Date:

மட்டக்களப்பில், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தில் இன்று (30) அதிகாரப்பூர்வமாக அகழ்வுப் பணி தொடங்கியுள்ளது.

1990ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு கல்முனை வழியாக காத்தான்குடியை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த போது, குருக்கள்மடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களை கடத்தி படுகொலை செய்து புதைத்ததாக சொல்லப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேரடியாக மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன. அதிகாரிகள் இந்த புதைகுழியில் அடையாளங்கள் மற்றும் சாட்சியங்களை சேகரித்து, கடந்த சம்பவங்களைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

இச்சம்பவம், 1990ஆம் ஆண்டு நடந்த கொலையின் தொடர்பான முக்கிய ஆதாரங்களை வெளிப்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது. சட்டத்தரணிகள் ,பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர் குழுக்களும் இடத்தில் சுய பாதுகாப்புடன் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி. பிரதீபன், யாழ் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன் ஆகியோர் முன்னிலையில் இன்று (30) முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்ட குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுர நீதவான் நீதிமன்றம், கூறப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக,...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்...

தவெக ஆட்சி அமைய இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் ஆதரவு ஏன்? – பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் விவரிப்பு

“தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே தருகிறோம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்