புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம்

Date:

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளும் வசதி தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, fuelpass.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘Vehicle Registration’ பகுதியின் ஊடாகத் தேவையான தகவல்களை உள்ளீடு செய்து புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்களுக்குத் தமது குறியீட்டைப் புதுப்பிப்பதில் சிக்கல்கள் இருக்கவில்லை. எனினும், புதிய வாகன உரிமையாளர்கள் எதிர்கொண்ட தொழில்நுட்பச் சிக்கல்கள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இன்று (15) பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...

திருடனிடமிருந்து நகை திருடிய பொலிஸ்காரர் கைது!

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா...

தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்