ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு வான்வழிப் போரில் ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி லேசான காயமடைந்தார், அதனால்தான் அவர் பொதுவில் காணப்படவில்லை என்று இஸ்ரேலின் உளவுத்துறை மதிப்பீடுகள் தெரிவிப்பதாக, இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
தற்போதைய ஈரானியத் தலைமையால் நியமிக்கப்பட்ட எந்தவொரு தலைவரும் “அழிக்கப்படுவதற்கான சந்தேகத்திற்கு இடமில்லாத இலக்காக இருப்பார்” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடந்த வாரம் கூறினார்.
புதன்கிழமை முன்னதாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரின் போது காயம் ஏற்பட்டதாக செய்திகள் வந்த போதிலும், கொமெனி “பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும்” இருப்பதாக ஈரானிய ஜனாதிபதியின் மகன் கூறினார்.
“திரு மொஜ்தபா கமேனி காயமடைந்ததாக நான் செய்தி கேள்விப்பட்டேன். தொடர்புகளைக் கொண்ட சில நண்பர்களிடம் கேட்டேன். கடவுளுக்கு நன்றி, அவர் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள்,” என்று அரசாங்க ஆலோசகராகவும் இருக்கும் யூசெப் பெசெஷ்கியன் தனது டெலிகிராம் சேனலில் ஒரு பதிவில் கூறினார்.



