எரிபொருள் விலைகள் எகிறின!

Date:

நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.

340 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.

281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாயாகும்.

329 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 353 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.

அதேநேரம் ஐ.ஓ.சி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது விலைகளை திருத்தம் செய்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்