பழைய, புதிய பயங்கரவாத தடைச்சட்டங்களுக்கு எதிராக வலி.கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் போராட்டம்

Date:

அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமுறைச்சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி புத்தூரில் கறுப்புப் பதாகை ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பதாகைகளை வீதியில் கட்சிப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை மதியம் புத்தார் பிரதேச சபையின் முன்பாக தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ஒன்று கூடிய பிரதேச சபையின் உறுப்பினர்கள் அரசு நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தினையும் நீக்கவேண்டும் என கோசம் எழுப்பியதுடன் புதிய அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தினையும் நீக்கவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதான தமிழ் அரசியல்கைதிகளை அரசு விடுகிக்க வேண்டும், அடக்குமுறைச்சட்டங்கள் ஜனநாயக விரோதமானவை என கோசம் எழுப்பினர். மேலும் அநுர அசு தேர்தல் காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவேன் எனக் கூறி வழங்கிய வாக்கறுதிகள் எங்கே? எனவும் கேள்வி எழுப்பினர்.
இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக கிராமம் கிராமமாக மக்களை சந்திக்கும் நிகழ்வுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்