கொமாண்டோ சலிந்தவின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த, பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளர் எனக் கூறப்படும் ‘கொமாண்டோ சலிந்த’ என்பவரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கொமாண்டோ சலிந்த என்பவரை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,. கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகமவின் உத்தியோகபூர்வ அறைக்குள் இன்று (27) ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

அதற்கமைய, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து: பிரகாஷ்ராஜ் மீது பாஜக போலீசில் புகார்

ராமாயணம் குறித்து சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது ஆந்திர...

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது....

போர் நிறுத்தத்தை நீடித்தார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்