புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

Date:

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை, 20 இராணுவ வீரர்களுக்கு நடத்தப்படும் லோகோமோட்டிவ் ஓட்டுநர் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க போக்குவரத்து அமைச்சகம் ஒப்புக்கொண்டதை அடுத்து வாபஸ் பெறப்பட்டது.

ரயில் லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான குழுவில், இராணுவத்தை சேர்ந்தவர்களுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் நேற்று நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்தனர்.

எனினும் அவ்வாறு பயிற்சியில் ஈடுபடவிருந்த 20 இராணுவத்தினரையும் இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் தாம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் அறிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...

ஏழைகளை வித்தியாசமாக நடந்த முடியாது: ரூ.225,000 இழப்பீடு வழங்க 3 பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2023 ஆம் ஆண்டில் ஹன்வெல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்