பரந்தன்- முல்லை வீதி இந்திய பாலத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை!

Date:

பரந்தன் முல்லைத்தீவு வீதியிலுள்ள இல. 11/1 (இந்தியன் பாலம்) பாலத்தினூடாக கனரக வாகனங்களுக்கான பயணக்கட்டுப்பாடு தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு-

மேற்படி பாலமானது அண்மையில் ஏற்பட்ட “டித்வா” புயலின் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் தற்காலிக பாலமாக அமைக்கப்பட்டு பொதுப்பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தது. இப்பாலத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக போக்குவரத்திற்கு உகந்த முறையில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்தமை தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில், அண்மைக்காலமாக இப்பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட பாதிப்புக்களைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட தரப்புகளின் நேரடியான களவிஜயம் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து கீழ் குறிப்பிடப்பட்டவாறு மட்டுப்படுத்தப்படுகின்றது.

  1. பேருந்து தவிர்ந்த அனைத்து விதமான கனரக வாகனங்களும் இப்பாலத்தினூடாக பயணிப்பது முற்றாக தடைசெய்யப்படுகின்றது.
  2. பயணிகள் பேருந்து சேவையானது பயணிகளை இறக்கி விடப்பட்டு பின்னர் பாலத்தினூடாக பயணிக்க முடியும்.
  3. ஏனைய அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட வேகக்கட்டுப்பாட்டுடன் பயணிக்க முடியும்.

எனவே நிலைமையின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு மேற்படி அறிவுத்தல்களை பின்பற்றுமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றீர்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஏழைகளை வித்தியாசமாக நடந்த முடியாது: ரூ.225,000 இழப்பீடு வழங்க 3 பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2023 ஆம் ஆண்டில் ஹன்வெல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களால்...

கந்தளாயில் நீரில் மூழ்கி மாணவன் பலி

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த...

தர்மபுரம் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு (A35) வீதியில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்