வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

Date:

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (பெப்.14) தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில் மோட்டர் சைககிள் ஒன்று திருடப்பட்டிருந்தது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமை பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, மடு, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய நபர் ஒருவரும், அவருடைய 25 வயதுடைய மனைவி, மற்றும் 31 வயதுடைய மனைவியின் மைத்துனர உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரூபாய் மூன்று இலட்சம் பெறுமதியான திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...

வான் தாக்குதலில் சேதமடைந்த ஏவுகணை தளங்களை சில மணித்தியாலங்களிலேயே ஈரான் மீண்டும் பயன்படுத்துகிறது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் தாக்கப்பட்ட நிலத்தடி ஏவுகணைப் பதுங்குகுழிகளையும் ஏவுதளங்களையும்...

போரில் இயேசுவை மேற்கோளிட்ட அமெரிக்க பாதுகாப்பு செயலர்: அது கிறிஸ்துவின் வழிமுறை அல்ல என போப் பதில்!

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், மத்திய கிழக்கில் ஒரு இராணுவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்