வெடுக்குநாறிமலையில் சிவராத்திரிக்கு சிக்கலிருக்காதாம்!

Date:

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.02.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது பொலிசாரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தோடு பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப்பகுதிக்குள் எடுத்துச்செல்வதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்கதர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

எனவே இம்முறை சிவராத்திரி தினவழிபாடுகளுக்கு அவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது. சைவமக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான சைவமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டுமெனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இம்முறை தடைகளின்றி சுதந்திரமாக மக்கள் வழிபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களால் பதில் வழங்கப்பட்டிருந்தது.

spot_imgspot_img

More like this
Related

அரச ஊழியர்களுக்கு 2027 ஜனவரி முதல் மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு!

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 2027 ஜனவரி...

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு!

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவை மேலும் மேம்படுத்தும் நோக்கில்...

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் திட்டமிட்ட தாக்குதல்கள் – ஐ.நா அதிர்ச்சி அறிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்