திருகோணமலை சட்டவிரோத புத்தர் சிலை விவகாரம்: பிக்குகளுக்கு பிணை!

Date:

பிணையில் விடுவிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களும் நீதிமன்றில் இருந்து வெளியேறியுள்ளனர்.

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களுக்கும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சந்தேகநபர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று (11) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டது.

திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...

வான் தாக்குதலில் சேதமடைந்த ஏவுகணை தளங்களை சில மணித்தியாலங்களிலேயே ஈரான் மீண்டும் பயன்படுத்துகிறது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் தாக்கப்பட்ட நிலத்தடி ஏவுகணைப் பதுங்குகுழிகளையும் ஏவுதளங்களையும்...

போரில் இயேசுவை மேற்கோளிட்ட அமெரிக்க பாதுகாப்பு செயலர்: அது கிறிஸ்துவின் வழிமுறை அல்ல என போப் பதில்!

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், மத்திய கிழக்கில் ஒரு இராணுவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்