புதிய கணக்காளர் நாயகத்தின் பெயரை பரிந்துரைந்த ஜனாதிபதி

Date:

தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் மற்றுமொரு பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாளை (31) அரசியலமைப்பு சபை கூடவுள்ளதுடன், இதன்போது இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் 4 சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியினால் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக 4 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு சபை உரிய முறையில் நிறைவேற்று அதிகாரத்தைச் செயற்படுத்தாத காரணத்தினால் இதுவரை கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாகவே உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், புதிய அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம் நாளை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு  முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களால் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவிகள்!

தித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள...

காதலனால் அடித்துக் கொல்லப்பட்ட யுவதி

காதலியை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய காதலன் அங்குலானையில்...

ஆற்று மணலை நம்பிய கட்டுமானப் பொறிமுறையில் மாற்றம் தேவை

வட மாகாணம் தற்போது கடுமையான மணல் பற்றாக்குறை என்ற மிகப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்