பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கிய நால்வர் கைது!

Date:

பேராதனை பகுதியில் உள்ளூர் இளைஞர்கள் குழுவுடன் ஏற்பட்ட மோதலில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பெலிசார் தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரஜித மலலசேகர காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர் என்பதை பொலிசார் உறுதிப்படுத்தினர்.

நேற்று முன்தினம் மதியம் முன்னாள் சங்கத் தலைவர் மற்றும் கால்நடை பீட மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் உட்பட எட்டு மாணவர்கள் குழு ஒன்று பேராதனை- வெலிஹிரியவில் உள்ள பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பன்றிப் பண்ணைக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிக்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

நான்கு உள்ளூர் இளைஞர்கள் சம்பவ இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். குழுவில் இருந்த பெண் மாணவர்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் போது மோதல் தொடங்கியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துன்புறுத்தலைத் தொடர்ந்து, மாணவிகள் கால்நடை பீடத்தைச் சேர்ந்த மற்ற மாணவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர், அவர்கள் பின்னர் அந்த இடத்திற்கு வந்தனர். பின்னர் உள்ளூர் இளைஞர்கள் உடைந்த கண்ணாடி போத்தல்களைப் பயன்படுத்தி மாணவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் மூன்று மாணவர்கள் பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடுமையான வெட்டுக் காயங்களுக்கு ஆளான ஒரு மாணவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கால்நடை மருத்துவ பீட மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பேராதனை பொலிசார் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்;

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்