கரூர் நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்!

Date:

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று நேரில் ஆஜரானார்.

கடந்த ஆண்டு செப்.27ஆம் திகதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக நிர்வாகிகளிடம் நவ.24. 25ஆம் திகதிகளில் விசாரணை நடைபெற்றது.

சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோர் டிச.2, 3ஆம் திகதிகளில் கரூர் வந்து விசாரணை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி.ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ கடந்த ஜன.6ஆம் திகதி சம்மன் அனுப்பியது.

அதன்படி, இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த விஜய், சிபிஐ தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் டெல்லிக்குச் சென்றுள்ளனர்.

இந்த விசாரணை 3 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் கேட்பதற்காக 50-க்கும் மேற்பட்ட முக்கியமான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். விசாரணை முடிந்த பிறகு, சிபிஐ தனது இறுதிக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக விஜய் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சட்ட வல்லுநர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஏற்கெனவே சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் மீண்டும் படைத்தரப்புக்கு காணி சுவீகரிக்க முஸ்தீபு!

எதிர்வரும் 20/01/2026 அன்று காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் தீவகம் வடக்கு...

பெண்ணின் கருப்பையிலிருந்து 2 கண்ணாடிப் போத்தல்கள் அகற்றல்: மதுபோதையில் விபரீதமாக நடந்த காமுகர்கள் இருவர் கைது!

வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

சத்தியாக்கிரகத்தில் குதித்தார் விமல் வீரவன்ச!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்