கச்சதீவு திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்

Date:

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ம், 28ம் திகதிகளில் நடைபெற இருக்கின்றது.

இவ்வருடம் இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு பங்குபற்றுவோருக்கான சுகாதாரம், போக்குவரத்து உட்பட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, ஏற்பாடுகள் மற்றும் உணவு வழங்கள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

கூட்டத்தில், யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார், யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள், பொலிஸார், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், துறை சார் திணைக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்