தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை: வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்

Date:

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ; மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் மல்லாகம் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறாக பொலிசாரினால் கைது செய்யப்படும் போது பொலிசாரினால் கடும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டே கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு தாக்குதல்களுக்கு உள்ளான வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆண்கள் விடுதி 9 இல் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்