புத்தளம்-அனுராதபுரம் வீதியில் கலாஓயா பாலத்திற்கு அருகில், இராஜாங்கணையில், விஜயபோதிராஜராம விகாரைக்கு முன்னால், 28 ஆம் திகதி சுமார் 70 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பேருந்தை நாடே அறியும்.
இந்த பேருந்து பற்றிய தகவல்கள் அதிகம் பரவியதும், இராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படையும் மீட்பு முயற்சி மேற்கொண்டதும் நாமே அறியும்.
இரண்டு நாட்களாக நடந்த மீட்பு முயற்சியின் பின்னர், ஹெலிகொப்டர்கள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டனர்.
பேருந்துக்குள்ளிருந்த பயணிகள் அருகிலிருந்த கட்டிடத்தின் கூரையில் ஏறி உயிரைக்காப்பாற்றிக் கொண்டனர்.
பின்னர் ஹெலிமூலம் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையை ஜனாதிபதி நேரடியாக கண்காணித்திருந்தார்.
இன்று 30 ஆம் திகதி காலை வாக்கில், வீதி தெரியும் அளவுக்கு வெள்ளம் தணிந்திருந்தது. அந்த பேருந்தும் தற்போது முழுமையாக தெரிகிறது. பயணிகள் உயிரைக் காப்பாற்ற ஏறியிருந்த கூரையும் அருகில் தெரிகிறது.



