களனி கங்கை ஆற்றுப்படுகை பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

Date:

களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் அண்மைய வரலாற்றில் ஏற்படாத மட்டத்திலான அதி அபாயகரமான வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (28) பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கை ஆற்றுப்படுகை பகுதிகளில் உள்ள நீரோட்டப் பிரதேசங்களில் பல இடங்களில் தற்போது அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது.

இந்த நிலைமையிலிருந்து உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறும், அதிகபட்ச பாதுகாப்பான இடங்களை நோக்கி முடிந்தவரை விரைவாகச் செல்லுமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்