அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் சிக்கித் தவித்த ஒரு குழுவை இலங்கை விமானப்படை மீட்டுள்ளது.
அனுராதபுரத்தில் கலாவெவ பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் நேற்று (27) முதல் தென்னை மரத்தில் சிக்கித் தவித்த ஒருவரும், இன்று (28) காலை பொலன்னறுவையில் உள்ள மனம்பிட்டிய பாலத்தில் சிக்கித் தவித்த ஆறு பேரும் பெல்-212 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



