1.56 இலட்சம் மக்கள் தொகை கொண்ட கியூரோசாவ் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது

Date:

ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டிக்கு தகுதி பெற்று கியூரோ​சாவ் சாதனை படைத்​துள்​ளது.

2026-ம் ஆண்டு நடை​பெறவுள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகு​திச் சுற்று ஆட்​டங்​கள் உலகம் முழு​வதும் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் ஜமைக்​கா​வின் கிங்ஸ்டன் நகரில் ‘பி’ பிரி​வில் நடை​பெற்ற தகு​திச் சுற்று ஆட்டத்தில் ஜமைக்கா – கியூரோ​சாவ் அணி​கள் மோதின. இந்த ஆட்​டம் 0-0 என்ற கோல் கணக்​கில் சமனிலையில் முடிவடைந்​தது.

இதையடுத்து தனது பிரி​வில் 12 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்த கியூரோ​சாவ், முதன்​முறை​யாக உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு முன்​னேறி வரலாற்​றுச் சாதனை படைத்​தது. உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டிக்கு தகுதி பெற்ற மக்​கள் தொகை அடிப்​படை​யில் மிகச்​சிறிய நாடு என்ற சாதனையை​யும் கியூரோசாவ் படைத்​துள்​ளது.

இந்த தீவின் மக்​கள் தொகை 1.56 இலட்​சம் மட்​டுமே. இதற்கு முன்னர் மக்​கள் தொகை அடிப்​படை​யில் உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டிக்கு தகுதி பெற்ற மிகச்​சிறிய நாடு என்ற பெருமையை ஐஸ்​லாந்து 2018ஆம் ஆண்டு பெற்​றிருந்​தது. அப்போது அந்​த​நாட்​டின் மக்​கள்​தொகை 3.50 இலட்​ச​மாக இருந்​தது.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்