கேட்டது பிரைட் ரைஸ்… கிடைத்தது புழு ரைஸ்!

Date:

மினிவாங்கொட பகுதியில் உள்ள பழமை வாய்ந்த உணவகம் ஒன்றில் மட்டக்களப்பை சோந்த குழு ஒன்றுக்கு சாப்பிடுவதற்காக வழங்கப்பட்ட மதிய உணவான பிரைட் ரைஸ் உணவில் புழு நெளிந்த சம்பவம் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பிரயாணித்த குழுவொன்று மினுவாங்கொட பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த உணவகம் ஒன்றில் சம்பவதினமான இன்று புதன்கிழமை வாகனத்தை நிறுத்தி மதிய உணவு உண்பதற்கு பிரைட் ரஸ் உணவை கோரினர்

இதனையடுத்து சாப்பிடுவதற்கு வழங்கப்பட்ட உணவான பிரைட் ரைஸ் உணவில் புழுக்கள் நெளிந்து ஓட தொடங்கியதை கண்டு உணவக உரிமையாளர் கவனத்துக்க கொண்டு வந்ததுடன் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்

இதேவேளை குறித்த உணவகம் அமைந்துள்ள அந்த பிரதான வீதியால் பயணிக்கும் அதிகமான பொதுமக்கள் அந்த உணவகத்தில் உணவருந்துவது குறிப்பிடத்தக்கது.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்