யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் நேற்று நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது போது இரண்டு பேர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது கைக்குண்டு மற்றும் வாளுடன் ஒருவரும் இரண்டு கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க சுன்னாகம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



