யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

Date:

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி உள்ளிட்ட சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் போதைதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள கருணாரத்ன தலைமையிலான குழுவினரின் ரோந்து நடவடிக்கைகளின் கைது நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞரும் அரியாலை பகுதியைச் சேர்ந்த முறையே 30 மற்றும் 32 வயதான இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்