யாழில் 950Kg கஞ்சா அழிப்பு

Date:

யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவுக்கமைய அழிக்கப்பட்டது.

இதன்போது 950 கிலோகிராம் கேரள கஞ்சா அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் உள்ள மின் தகன மேடையில் போடப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் மற்றும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிவான் உசைன் ஆகியோரின் முன்னிலையில் இன்று மதியம் குறித்த போதைப்பொருள் தொகுதி அழிக்கப்பட்டது.

கடந்த சில வருடங்களாக நீதிமன்ற சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவே இவ்வாறு அழிக்கப்பட்டது.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் எடுத்து வரப்பட்ட கேரள கஞ்சா நீதிவான், நீதிமன்ற பதிவாளர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்