யாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் மந்திரிமனை முகப்பின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது.
யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனின் மந்திரியின் மனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அது இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான விதத்தில் காணப்படுகின்றது எனவும் அதனை பேணிப் பாதுகாக்க பல தரப்பும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் குறித்த முயற்சி சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் இன்று திடீரென காற்றுடன் ஏற்பட்ட மழை காரணமாக நல்லூர் மந்திரிமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.



