வடக்கு மாகாண விசேட பெண் நோயியல் சிகிச்சை மையம் – கைகெட்டியும் வாய்க்கு எட்டவில்லை

Date:

– மு. தமிழ்ச்செல்வன்

தமிழில் உள்ள ஒரு பழமொழிதான் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பது.இது அப்படியே அச்சொட்டாக அப்படியே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்திற்கு பொருந்துகிறது.

நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் புல கோடி ரூபாக்கள் செலவில் 2017 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவால் திறந்து வைக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்தும் எந்தவொரு செயற்பாடும் இன்றி காணப்படுகிறது இவ் விசேட மகளிர் சிகிச்சை மையம்.

எனவே கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் பேசப்படும் விடயமாக இது மாறியிருக்கிறது.
இது தொடர்பில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையம் தொடர்பான விடயங்கள் ஏதோ தற்செயலாக நடைபெறுவதுபோல ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுவதுபோலத் தெரிகிறது.

ஏனெனில், கடந்த வாரம் “கிளிநொச்சி பொது வைத்தியசாலை மகப்பேறு பிரிவைச் சார்ந்த முறைப்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு” என்ற செய்தி 25.08.2025 அன்று ஊடகமொன்றில் வெளியாகியிருந்தது.

இதன்போது “பெண் நோயியல் மற்றும் சிறப்பு மகப்பேறு பிரிவை இயக்குவதில் உள்ள தடைகள் ஆளணி உருவாக்கம் மற்றும் மேலதிக ஆளணி நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது” என அச் செய்தி தொடர்ந்து செல்கிறது.

இதனிடையே 24.08.2025 அன்று அவசர அவசரமாக வடமாகாண ஆளுனர் தலைமையில் கிளிநொச்சி நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கூடி வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தினை எவ்வாறு இயக்குவது என்று ஒரு கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.

29.08.2025 அன்று இந்தச் சிகிச்சை மையத்தினை இயக்குமாறு கோரியும் இதில் காணப்படும் அதிநவீன உபகரணங்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றும் திட்டத்தினைக் கைவிடுமாறு கோரியும் பொதுமக்களைக் கூட்டி கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்கத்தினர் ஒரு போராட்டத்தை நடாத்தியிருக்கின்றனர்.

ஆளுனரது கலந்துரையாடலில் தீர்வாக தற்போது கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் இயங்கிவரும் மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் விடுதிகளையும் சிறுவர் விடுதியினையும் குறித்த வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்திற்கு உடனடியாக நகர்த்துமாறு ஆளுனர் உத்தரவிட்டுள்ளார் என அறிய முடிகிறது.

இவை எல்லாவற்றிற்கும் பல படிகள் மேலே போய் நோயாளர் நலன்புரிச் சங்கம் நடாத்திய ஆர்ப்பாட்டம் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக கருதப்பட்டு அரசு தரப்பு எம்பியான இளங்குமரன் அவர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதுதான் வேதனையின் உச்சமாகும்.

இந்த நிலையில் நான் சில உண்மைகளை ஆதாரத்துடன் பொதுவெளிக்குக் கொண்டுவர வேண்டியவனாக இருக்கிறேன்.

குறிப்பாக மேற்படி மையமானது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் இன்றிலிருந்து சரியாக மூன்று வருடங்களுக்கு முன்னதாக 2022ஆம் ஆண்டு ஆவணி மாதம் எட்டாம் திகதி பல்வேறு விரிவான ஆதாரங்கள் மற்றும் அவற்றின் அடிப்படையிலான எதிர்வுகூறல்களுடன் நான் ஒரு கட்டுரையினை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையின் இறுதியில் நான் இவ்வாறுதான் குறிப்பிட்டிருந்தேன்.

சுருக்கமாக சொல்வதானால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரு விரிவாக்கமாகவே (நுஒவநளெழைn ழக புநநெசயட ர்ழளிவையட முடைiழெஉhஉhi) இந்த விசேட மகளிர் சிகிச்சை மையக் கட்டடத்தொகுதி இயக்கப்படுவதற்கு அதிக சாத்தியங்கள் உண்டு.

அதனால் புதிய கட்டடத்தொகுதியிருந்து தற்போதைய வைத்தியசாலைக்கும் இங்கிருந்து அங்கும் வெட்ட வெளி ஊடாக மழையிலும் வெயிலிலும் நோயாளர்களை காவித் திரிவார்கள்.

‘இனவாத சிங்கள அரசின் மத்திய சுகாதார அமைச்சு திட்டமிடாமல் புதிய கட்டடத்தொகுதியை தொலைவில் அமைத்துத் தமிழ் நோயாளர்களை திட்டமிட்ட இனப்படுகொலை செய்வதாக’ ஒருவர் பாராளுமன்றத்தில் வீர வசனம் பேசுவார்.

அவர்தான் இந்தப் புதிய கட்டடத்தொகுதியைத் தற்போதைய இடத்திற்கு தள்ளினார் என்பதை அறியாத அல்லது வசதியாக மறந்த அவரது விசிலடிச்சான் குஞ்சுகள் கைதட்டி மகிழ்வார்கள்.
அப்போதைய வைத்தியசாலைப் பணிப்பாளர் சனங்களுக்காக மூடிய நடைபாதை (உழஎநசநன றயல) அமைத்துத் தரும்படி நலன்விரும்பிகளுக்கு கோரிக்கை வைப்பார். அதை ஏற்று புலத்திலுள்ள பலர் நெஞ்சுருகி நிதியளிப்பார்கள். இங்குள்ள சிலர் அதில் கொஞ்சம் அள்ளி எடுப்பார்கள்.

வடக்கில் விசேட வைத்திய வசதி தேவைப்படும் பெண்களும் கர்ப்பவதிகளும் கொழும்பிற்கும் வெளிநாடுகளுக்கும் நடையாய் நடப்பார்கள்.

மேலும் “இது தவிர்க்கப்படவேண்டுமானால் உரிய தரப்பினருக்கு தற்போதே தேவையான அழுத்தங்களை அனைவரும் ஒருமித்து வழங்கவேண்டும். திட்டத்தினை முன்னெடுக்கும் நெதர்லாந்து அரசிற்கு நேரடியாகவே இந்தக் கள நிலவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.”

ஏன் அவ்வாறு நான் ஊகித்தேன், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது பற்றிய விபரங்களை எனது முந்தைய கட்டுரையினை வாசித்து அறிந்து கொள்ளலாம்

இக்கட்டுரை பல தளங்களில் பிரசுரமானதும் கிளிநொச்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சில மூத்த வைத்தியர்களும் என்னைக் கடிந்து கொண்டார்கள். இது தேவையற்ற விமர்சனம் என்று குற்றம்சாட்டினார்கள்.

வெளியே உள்ள ஒரு ஊடகவியலாளனான எனது பொது அறிவுக்கு ஊகிக்க முடிந்த விடயங்களை அதே துறையில் வல்லுனர்களாக இருப்பவர்களால் ஏன் எதிர்வுகூறவோ அல்லது மாற்று நடவடிக்கைகளை உரியநேரத்தில் எடுக்கவோ முடியாது போனது? என்ற கேள்வி தற்போது எனது மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எனது முன்னைய கட்டுரையில் நான் விபரித்திருந்த சில விடயங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான ஆதாரங்கள் சிலவற்றை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் தற்போது செய்யப்பட வேண்டியது என்ன என்பது குறித்து ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பின்னணி

‘வடக்கிலேயே மகளிருக்கான ஒரு விசேட சிகிச்சை மையத்தினை (Specialized centre for Women’s health in Northern Province) உருவாக்க வேண்டும்’ என்ற பரிந்துரை விசேட முன்மொழிவாக (Special Proposal) வைத்திய நிபுணர்கள் கொண்ட ஆலோசனைச் சபையினால் வடக்கு மாகாண சபைக்கு 2015/2016ம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் அவ்வாறான விசேட மகளிர் சிகிச்சை மையங்களாக கொழும்பு டி சொய்ஸா மகளிர் மருத்துவமனை கொழும்பு காசில் வீதி மகளிர் மருத்துவமனை காலி மகளிர் மருத்துவமனை ஆகியன செயற்படுகின்றன.

இதன் காரணமாக வடக்கில் உள்ள கர்ப்பவதிகள் உள்ளிட்ட பெண்களுக்கு விசேட சிகிச்சைகள் தேவைப்படும்போது தென்பகுதிக்கு அனுப்பப்படும் நிலையே தற்போது காணப்படுகிறது.

அது தவிரஇ குழந்தைப் பேறு கிடைக்காதவர்களுக்கான கருவளவாக்கல் சிகிச்சையினைப் பெறுவதற்கு வடமாகாண மக்கள் பெரும் பொருட்செலவில் கொழும்பிற்கும் வெளிநாடுகளுக்கும் செல்லவேண்டி உள்ளது.

இதனால் வடமாகாண மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பொருளாதார நெருக்கீடுகள் மற்றும் வசதியீனங்களைக் கருத்தில் கொண்டு அவை எல்லாவற்றிற்கும் நிரந்தரத் தீர்வாகவே துறைசார் வல்லுனர்களால் மேற்படி திட்ட முன்மொழிவு வடக்கு மாகாண சுகாதார அமைச்சிற்கு முன்வைக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் ஆரம்ப காலப்பகுதியான 2016/2017ம் ஆண்டுகளில் இந்த விசேட மகளிர் சிகிச்சை மையத்தினை அமைப்பது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடலுக்கு நெதர்லாந்து அரசின் பிரதிநிதிகள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வந்திருந்தார்கள்.

அவ்வேளையில் நெதர்லாந்து உட்பட்ட பன்னாட்டு நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு யுத்த சூழலால் இடைநடுவில் தடைபட்டுப்போன கிளிநொச்சி வைத்திசாலையின் இரண்டாம் கட்டத்தினை நிறைவு செய்ய வேண்டியதற்கான தேவை குறித்து மாவட்ட மற்றும் வைத்தியசாலைச் சுகாதாரத் தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.

மிகுந்த அக்கறையுடன் அதுகுறித்து கேட்டறிந்த நெதர்லாந்து குழுவினர் தம்மால் அமைத்துத் தரப்படவுள்ள விசேட மகளிர் சிகிச்சை மையத்துடன் இணைந்ததாக மருத்துவமனையின் இரண்டாம் கட்டத்தில் அமைக்கப்படவேண்டியுள்ள பிரதான பிரிவுகளில் ஏதாவது ஒன்றினையும் அமைத்துத் தருவதாக உறுதியளித்தனர்.

எனவே மீளமைப்புச் செய்யப்பட்ட மூலத் திட்டத் துடன் (revised master plan) முழுமையான முன்மொழிவினை (comprehensive proposal) விரைவில் சமரப்பிக்குமாறும் அதன் அடிப்படையில் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை தேசிய திட்டமிடல் திணைக்களம் ஆகியவற்றின் ஆலோசனையின் பிரகாரம் 2016 மார்கழி மாதம் வைத்தியசாலையின் மூலத் திட்ட மீளாய்வுச் செயற்பாடு (Revision of hospital master plan) மற்றும் முழுமையான முன்மொழிவினை வரையும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட அபிவிருத்தியில் சேர்க்கப்பட்ட வேண்டிய சில அலகுகள் இவ் வைத்தியசாலையின் ஆரம்பகாலத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த மூலத் திட்டத்தில் (Master plan) இருந்திருக்கவில்லை.

(வைத்தியசாலையின் ஆரம்பகாலத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த மூலத் திட்டம். ஆதாரம்- 2017 ஆம் ஆண்டு பங்குதாரர்கள் கலந்துரையாடல் ஒன்றில் மாவட்ட சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்ட விளக்கக்காட்சியிலிருந்து பெறப்பட்டது)

வைத்தியசாலையின் மூலத் திட்ட மீளாய்வு (Revision of hospital master plan) மற்றும் முழுமையான முன்மொழிவினை வரையும் செயற்பாட்டிற்காக (drafting comprehensive proposal) 2017ம் ஆண்டு தை மாதம் அப்போதைய மாவட்ட சுகாதார நிர்வாகத்தினால் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

சாத்தியவள ஆய்வு

அடுத்து கட்டமாகத் திட்டத்திற்கான பூர்வாங்க சாத்தியவள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு 2016/2017 காலப்பகுதிகளில் ஆகக் குறைந்தது பத்துத் தடவைகள் நெதர்லாந்து குழுவினர் கிளிநொச்சி வைத்தியசாலைஇ வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் தென்பகுதியில் அமைந்துள்ள விசேட மகளிர் சிகிச்சை மையங்கள் ஜபடம் 3ஸ ஆகியவற்றுக்கு நேரடியாக வருகை தந்திருந்தனர்.

( நெதர்லாந்துக் குழுவினர் கொழும்பு காசல் வீதி மகளிருக்கான விசேட வைத்தியசாலைக்கு 15.09.2016 அன்று களத்தரிசிப்புச் செய்து அவ்வைத்தியசாலையின் கட்டமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் குறித்து அறிந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம். ஆதாரம்- 2017 ஆம் ஆண்டு பங்குதாரர்கள் கலந்துரையாடல் ஒன்றில் மாவட்ட சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்ட விளக்கக்காட்சியிலிருந்து பெறப்பட்டது)

மத்திய சுகாதார அமைச்சின் அப்போதைய திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் நாயகமும் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டதுடன் பல்வேறு பங்குதாரர் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன.

(மத்திய சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களுடன், அவசர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தினை இரண்டாம் கட்ட அபிவிருத்தியில் உள்ளடக்கும் மூலத் திட்ட மீளாய்வுச் செயற்பாடு தொடர்பில் 15.12.2016 அன்று கிளிநொச்சி வைத்தியசாலையின் கலந்துரையாடல் மண்டபத்தில் கலந்துரையாடியபோது எடுக்கப்பட்டது. ஆதாரம்- 2017 ஆம் ஆண்டு பங்குதாரர்கள் கலந்துரையாடல் ஒன்றில் மாவட்ட சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்ட விளக்கக்காட்சியிலிருந்து பெறப்பட்டது)

ஏ9 பிரதான மார்க்கத்தில் உள்ள வடக்கின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசர விபத்துச் சிகிச்சைப்பிரிவிற்கான முறையான வசதிகளுடன் கூடிய கட்டடம் ஒன்று அதுவரை அமைக்கப்பட்டிருக்கவில்லை.

இதனால் இரண்டாம் கட்ட வைத்தியசாலை அபிவிருத்தியில் அவசர மற்றும் விபத்துச் சேவைப் பிரிவிற்கு முன்னுரிமை வழங்குவது எனவும் அதனை விசேட மகளிர் சிகிச்சை மையத்தின் தரைத்தளத்தில் அமைப்பது என்றும் அப்போது அவ்விடயத்தில் சம்பந்தப்பட்டிருந்த சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(மத்திய சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மாவட்ட மக்கள் பிரதிநிதிக்கு வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தினை இரண்டாம் கட்ட அபிவிருத்தியில் உள்ளடக்கும் மூலத் திட்ட மீளாய்வுச் செயற்பாடு தொடர்பில் 15.12.2016 அன்று கிளிநொச்சியில் மக்கள் பிரதிநிதிக்கு விளக்கிக் கூறிக் கலந்துரையாடியபோது எடுக்கப்பட்டது. ஆதாரம்- 2017 ஆம் ஆண்டு பங்குதாரர்கள் கலந்துரையாடல் ஒன்றில் மாவட்ட சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்ட விளக்கக்காட்சியிலிருந்து பெறப்பட்டது)

விசேட மகளிர் சிகிச்சை மையத்தின் தரைத்தளத்தில் சிரி ஸ்கானருடன் கூடிய அவசர மற்றும் விபத்து சேவைப் பிரிவினை அமைப்பது என்றும் அது கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கும்இ விசேட மகப்பேற்று அலகிற்கும் பொதுவானதாக இருக்கும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

இதன்மூலம் ஆளணிகள் உள்ளிட்ட வளங்கள் பரவலாக்கப்படமால் ஒருங்கிணைக்கப்படும் எனவும் கிளிநொச்சி வைத்திசாலையின் தனித்துவமான ‘வெளி நடைபாதைகள் அற்ற வைத்தியசாலை’ வடிவம் பேணப்படும் எனவும் மேற்குறித்த ஆலோசனை நியாயப்படுத்தப்பட்டிருந்தது.

அதற்குப் பொருத்தமாக கிளிநொச்சி வைத்தியசாலையின் தற்போதைய கட்டடத் தொகுதியுடன் இணைந்தவாறு (தற்போதைய அவசர சிகிச்சைப் பிரிவிற்கு முன்பாக) நெதர்லாந்து அரசினால் அமைக்கப்படப்போகும் கட்டடத்தொகுதியினைக் கட்டுவதே சிறந்தது என முன்மொழியப்பட்டது.

(கிளிநொச்சி பொறியியல்பீட துறைசார் வல்லுனர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட குழுவினர் 29.12.2016 அன்று வைத்தியசாலையில் மூலத் திட்ட மீளாய்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட படம். ஆதாரம்- 2017 ஆம் ஆண்டு பங்குதாரர்கள் கலந்துரையாடல் ஒன்றில் மாவட்ட சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்ட விளக்கக்காட்சியிலிருந்து பெறப்பட்டது)

இந்த ஆய்வுகளின் பிரகாரம் வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தினைக் கிளிநொச்சி வைத்தியசாலையின் தற்போதைய அவசர சிகிச்சைப்பிரிவிற்கு முன்பாக அமைப்பதாகவும் அந்த அலகின் தரைத்தளத்தில் சிரி ஸ்கானருடன் கூடிய அவசர மற்றும் விபத்து சேவைப் பிரிவு அமைக்கப்படும் எனவும் இறுதி முடிவு எட்டப்பட்டதுடன் முன்மொழியப்பட்ட செயற்திட்டமும் இறுதிசெய்யப்பட்டது.

(கிளிநொச்சி பொறியியல்பீடத்தில் துறைசார் வல்லுனர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரால் 22.03.2017 அன்று சிரி ஸ்கானருடன் கூடிய அவசர மற்றும் விபத்து சேவைப் பிரிவு மற்றும் வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையம் ஆகியவற்றினை இரண்டாம் கட்ட அபிவிருத்தியில் உள்ளடக்கி வரையப்பட்ட திட்ட முன்மொழிவு இறுதி செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட படம். ஆதாரம்- 2017 ஆம் ஆண்டு பங்குதாரர்கள் கலந்துரையாடல் ஒன்றில் மாவட்ட சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்ட விளக்கக்காட்சியிலிருந்து பெறப்பட்டது)

அதனைத் தொடர்ந்துஇ சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு சகலராலும் ஏற்கப்பட்டு அதற்குரிய பரிந்துரை 04.05.2017 ஆம் திகதிய கடிதம் ஊடாக இலங்கை தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.

(இலங்கை தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 04.05.2017 ஆம் திகதிய பரிந்துரைக் கடிதம். ஆதாரம்- 2017 ஆம் ஆண்டு பங்குதாரர்கள் கலந்துரையாடல் ஒன்றில் மாவட்ட சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்ட விளக்கக்காட்சியிலிருந்து பெறப்பட்டது)

இக் கடிதத்தில்இ 4474 மில்லியன் மதிப்பிடப்பட்ட —இரண்டாம் கட்ட அபிவிருத்தியின் முதலாம் பகுதியான— வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையம் நெதர்லாந்து அரசின் உதவியுடன் 1974 மில்லியன் ரூபாக்கள் செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் கட்டம் இரண்டின் மிகுதியான 2500 மில்லியன் பெறுமதியான கட்டுமானங்கள் பாதீட்டு ஒதுக்கீட்டின் ஊடாக நிர்மாணிக்கப்படும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது 4474 மில்லியன் மொத்த மதிப்பீட்டில், வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தினையும் உள்ளடக்கி கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவானது இரண்டு மாதங்களில் சகல மட்டங்களிலும் பரிந்துரைக்கப்பட்டு அதற்குரிய நிதிமூலங்களும் அடையாளப்படுத்தப்பட்டு விட்டன. இந்த அனுமதியின் பிரகாரம் தொடர் நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டிருந்தால்இ பாதீட்டின் ஊடாக 2500 மில்லியன் பெறப்பட்டு இப்போது கிளிநொச்சி வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தியும் நிறைவேறியிருக்கும்.

(இலங்கை தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 04.05.2017 ஆம் திகதிய கடிதத்தில் காட்டப்பட்டுள்ள கிளிநொச்சி வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதிமூலங்கள். ஆதாரம்- 2017 ஆம் ஆண்டு பங்குதாரர்கள் கலந்துரையாடல் ஒன்றில் மாவட்ட சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்ட விளக்கக் காட்சியிலிருந்து பெறப்பட்டது)

வெளியார் தலையீடுகள்

இருந்தபோதிலும்இ 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சில அரசியல்வாதிகள், மூத்த வைத்தியர்கள் ஓரிருவர், மற்றும் உள்ளுர் வல்லுனர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட வெளியாட்கள் சிலர் “மூலத் திட்டத்தில் இந்த மையம் இல்லை. இவ்வாறான திட்டம் குறித்துப் ‘பொதுமக்களாகிய’ தமக்கு எதுவும் தெரியாது” எனக் காரணம் காட்டி ‘வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையமானது கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்படக்கூடாது’ என்று போர்க்கொடி தூக்கினர்.

இக்காலப்பகுதியில் மாகாண மற்றும் மாவட்ட அரசியல் மற்றும் சுகாதார நிர்வாக பதவிநிலை மாற்றங்கள் ஏற்பட்டுப் புதியவர்கள் பொறுப்பேற்றிருந்தனர்.

இந்தப் பின்னணியில் 17.02.2018 அன்று கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையில் அப்போதைய வடமாகாண சுகாதார அமைச்சர் தலைமையில் கூடி “குறித்த மையத்தினை வைத்தியசாலைக் காணியில் அமைப்பதா அல்லது வேறு இடத்தில் அமைப்பதா என்பது தொடர்பிலும்இ இது கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தியாகக் கருதப்படுமா?” என மேற்குறிப்பிட்ட அனைவரும் ஆராய்ந்தனர்.

(முன்மொழிவு இறுதி செய்யப்பட்டு நிதிமூலங்கள் அடையாளங்காணப்பட்ட பின்னர்இ, வெளியாட்கள் மற்றும் அரசியலாளர்கள் சிலர் மாவட்ட சுகாதாரத் துறையினருடன் சேர்ந்து சாத்தியவள ஆய்வில் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட படம்.)

அதாவது வடக்கு மாகாணசபை வடக்கு சுகாதார அமைச்சு மத்திய சுகாதார அமைச்சு நெதர்லாந்துப் பிரதிநிதிகள் மாவட்ட சுகாதார சேவைகள் வைத்திசாலை வைத்திய நிபுணர்கள் மற்றும் கிளிநொச்சி பொறியியல்பீட வல்லுனர்கள் ஆகிய அனைவரும் 2016ஆம் ஆண்டிலிருந்து கலந்துரையாடித் தயாரித்துச் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் விளக்கமளிக்கப்பட்டுஇ 2017ஆம் ஆண்டில் தேசிய திட்டமிடல் திணைக்களம் திறைசேரி வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆகியனவறினால் அங்கீகரிக்கப்பட்டு நிதிமூலங்களும் இனங்காணப்பட்ட திட்டம் குறித்த ஒரு சாத்தியவள ஆய்வினை அவர்கள் நடத்தினார்கள்.

(வெளியாட்கள் மற்றும் அரசியலாளர்கள் சிலர் மாவட்ட சுகாதாரத் துறையினருடன் சேர்ந்து 17.02.2018 அன்று மீண்டுமொரு சாத்தியவள ஆய்வில் ஈடுபட்டது)

இவற்றின் தொடர்ச்சியாக வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தினை கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தினுள் முன்னர் தீர்மானிக்கப்பட்ட இடத்தில் — அதாவது தற்போதுள்ள வைத்தியசாலைக் கட்டடத்தின் முன்புறத்தில், சிறுவர் பூங்காவினை உள்ளடக்கிய பிரதேசத்தில் — கட்ட அனுமதிப்பதில்லை” என்ற தமது முடிவினை புதிய மாவட்ட சுகாதார நிர்வாகத்தினர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஊடாக நெதர்லாந்துக் குழுவுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

(கிளிநொச்சி வைத்தியசாலைஇ 2017 இல் வல்லுனர்களால் தீரமானிக்கப்பட்ட தரைத்தளத்தில் சிரி ஸ்கானருடன் கூடிய அவசர மற்றும் விபத்து சேவைப் பிரிவுடன் கூடிய வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தின் அமைவிடம், மற்றும் 2018 இல் அரசியல் மற்றும் வெளி அழுத்தங்களால் மாற்றப்பட்ட தற்போதைய அமைவிடம் ஆகியவற்றினைக் காட்டும் செய்மதிப் படம்.)

முன்னாள் மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) ஒருவரிடம் நான் இதுபற்றிக் கேட்டபோது “திட்டமிடலின் அடிப்படையினையே கேள்விக்குறியாக்கும் ஒரு செயற்பாடு இது. சாத்திய வள ஆய்வானது எந்தவொரு திட்டமும் தொடங்கப்படுவதற்கு முன்னதாகச் செய்யப்படவேண்டியது. திட்ட முன்மொழிவு ஏற்கப்பட்டுஇ திட்ட அமைவிடம் இறுதி செய்யப்பட்டுஇ நிதி மூலங்களும் தீர்மானிக்கப்பட்டுச் சில மாதங்களுக்குள் மீண்டும் சாத்தியவள ஆய்வில் ஈடுபடுவதென்பதும் திட்ட அமைவிடத்தினை மாற்றும் முடிவினை எடுத்ததும் படு முட்டாள்தனமானது. இவ்வாறான ஒரு திட்டம் இப்போது செயலிழந்து கிடப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இந்தப் புள்ளியில் தான் இத்திட்டத்தின் தோல்விக்கு அத்திவாரம் இடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட சகலரும் பொறுப்புக் கூறலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்” என மிகக் கடுமையான கருத்தினை முன்வைத்தார்.

இவற்றின் மத்தியில்இ வைத்தியசாலையின் மூலத் திட்ட மீளாய்வுச் செயற்பாடு மற்றும் முழுமையான முன்மொழிவினை வரையும் செயற்பாட்டிற்காக 2017ம் ஆண்டு தை மாதம் அமைக்கப்பட்ட விசேட குழு 22.03.2017 இல் முன்மொழியப்பட்ட செயற்திட்டத்திற்கமையக் (படம் 14) கட்டணம் எதுவும் இன்றி — பல மில்லியன் செலவாகக்கூடிய—மூலத்திட்ட ஆவணங்களை இலத்திரனியல் வடிவத்திற்கு மாற்றுவது மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையின் மூலத் திட்ட மீளாய்வு வரைபடத்தினை இற்றைப்படுத்தும் நடவடிக்கை ஆகியவற்றில் இறங்கியிருந்தது. அவர்களது உதவி இனிமேல் தேவைப்படாது எனவும் தாமே அதனைச் செய்துகொள்வதாகவும் தெரிவித்து மாவட்ட சுகாதாரத்துறையினரால் அக்குழுவின் உதவி புறக்கணிக்கப்பட்டது. இதுநாள்வரையில் கிளிநொச்சி வைத்தியசாலையின் மூலத் திட்ட மீளாய்வு வரைபடமானது இற்றைப்படுத்தப்படவில்லை என்பது இவ்விடத்தில் குறிப்பிடப்படவேண்டும்.

தற்போதைய நிலை

வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையக் கட்டடத்தொகுதியை முழுமையாக இயக்கமுடியாது எனத் தற்போதைய சுகாதாரத்துறை நிர்வாகம் கூறுகிறது. இதற்கு இரண்டு இடங்களில் அலகுகளை இயக்குவதற்கு ஆளணி போதாது. கட்டடங்களுக்கு இடையில் நோயாளிகளை மாற்றுவதற்கு மேலதிக ஆளணி தேவைஇ இரண்டு கட்டடத்தொகுதிகளையும் இணைப்பதற்கு நடைபாதை அமைக்கப்பட வேண்டும் மற்றும் வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையக் கட்டடத்தொகுதியை இயக்குவதற்கு முன்னர் அதன் கழிவு வடிகான்களை பிரதான வைத்தியசாலைக் கட்டடத்திற்கான கழிவகற்றல் தொகுதிகளுடன் இணைக்கவோ அல்லது தனியாக கழிவகற்றல் தொகுதியை அமைக்கவோ காலம் தேவை என்ற காரணிகள் கூறப்படுகின்றன.

இதிலிருந்துஇ கிளிநொச்சி வைத்திசாலையின் தனித்துவமான ‘வெளி நடைபாதைகள் அற்ற வைத்தியசாலை’ வடிவம் இழக்கப்பட்டு விட்டதும் வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையக் கட்டடத்தொகுதியை முழுமையாக இயக்குவதில் பல மேலதிக செலவீனங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் எழுந்துள்ளமையும் தெளிவாகிறது.

இதனால், ஏற்படும் அழுத்தங்களைச் சமாளிக்கும் நோக்குடனும் வளங்களை பயன்பாடின்றி அழியவிடாது காக்கும் நோக்குடனும் கிளிநொச்சி வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் மகப்பேற்றுப் பெண்ணோயியல் பிரிவுகளை இந்த புதிய மையத்திற்கு மாற்றுமாறும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நாம் ஊகிப்பது கடினமான காரியமல்ல.

இதன்மூலம் வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையமானது கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் மகப்பேறுப் பெண்ணோயியல் பிரிவாக மாறப்போகிறது.

இதனையே மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு எதிர்வுகூறியிருந்தேன்

வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையக் கட்டடத்தொகுதியாக அது இயக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குதிரைக் கொம்புதான். இதனை தந்திரமாக மறைப்பதற்காக கிளிநொச்சி வைத்தியசாலையின் தற்போதைய மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் விடுதிகளைப் புதிய கட்டடத்தொகுதிக்கு மாற்றிவிடும் உத்தியையும் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ளக்கூடும்.

கேள்வி எழுப்புவர்களுக்கு ‘இதுதான் அது’ என்றோ அல்லது ‘தற்போதைய பொருளாதார நிலையில் அரசு புதிய ஆளணிகளை வழங்காது. அதனால் கட்டடத்தை உபயோகிப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை’ என்றோ பதில் வழங்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.

ஏனென்றால் “சரி. ஆளணி நியமிப்பது இருக்கட்டும். அப்படி நியமிப்பதற்கு முதற்படியாக ஆளணிகளுக்கான அனுமதி அவசியம். அதனைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களா?” என்று எவரும் கேள்வி எழுப்பமாட்டார்கள் என்று சுகாதாரத்துறையினருக்கு நம்பிக்கையாகத் தெரியும்.

இது தொடர்பில் முன்னாள் திறைசேரி உதவிச் செயலாளர் ஒருவருடன் நான் கலந்துரையாடியபோது அவர் சொன்னார் “கிளிநொச்சி வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் மகப்பேற்றுப் பெண்ணோயியல் பிரிவுகளை இந்த புதிய மையத்திற்கு மாற்றுமாறும் இந்த நகர்வு வெளிநாட்டுக் கடன் மூலமாகப் பெறப்பட்ட பொது நிதியினால் அமைக்கப்பட்ட ஒரு திட்டத்தின் மூல நோக்கத்தினையே புரட்டிப்போடுவதுடன், அந்த நிதியினைத் தவறாகக் கையாண்டதாக அமையும் என்பதோடு, எதிர்காலத்தில் வெளிநாட்டு நிதி உதவிகளை வடமாகாணம் பெறும் முயற்சிகளுக்கும் பெரும் தடையாக மாறும்”.

அதுமட்டுமல்ல “செயற்திட்டம் முடிவுபெற்றும் அதனை இயக்கமுடியாதிருப்பதும் மூல நோக்கத்தை புறந்தள்ளி மையத்தை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதும்இ வெளிநாட்டுக் கடனாகப் பெற்ற பொது நிதியினைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் கருதப்படவேண்டும்” என ஓய்வு பெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் ஒருவரிடம் நான் கேட்டபோது கூறினார்.

குறித்துச் சொல்லுவதானால் வல்லுனர் குழுவின் ஆலோசனைகள் மற்றம் மாகாண மத்திய சுகாதார அமைச்சுக்களால் இற்றைப்படுத்தப்பட்ட தீர்மானங்கள் புறக்கணிக்கப்பட்டதோடுஇ சகல எச்சரிக்கைகளையும் மீறி குறித்த மையத்தின் அமைவிடத்தினை வெளியார் அழுத்தம் காரணமாக மாவட்ட சுகாதாரத்துறையினர் மாற்றிமையே தற்போதைய சகல நடைமுறைச் சிக்கல்களுக்கும் காரணமாகி உள்ளது.

முன்பு நான் குறிப்பிட்டவாறு 17.02.2018 அன்று வெளியார் மற்றும் அரசியலாளர்களது அழுத்தம் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய “வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தினை கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தினுள் முன்னர் தீர்மானிக்கப்பட்ட இடத்தில் கட்ட அனுமதிப்பதில்லை” என கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத்துறையினர் முடிவெடுத்துஇ அதனை நெதர்லாந்திற்கு அறிவித்த பின்னர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நெதர்லாந்திலிருந்து 21.02.2018 அன்று பின்வருமாறு பதில் வந்திருந்தது.

நெதர்லாந்திலிருந்து வந்த பதில் கடிதத்தின் தமிழாக்கம்

அன்பின் வைத்தியர் ……..

கிளிநொச்சியின் ஆகப்பிந்திய நிலமைகள் குறித்து எனக்குத் தகவல் தந்தமைக்கு நன்றி

கிளிநொச்சி (வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையம்) திட்ட அமைவிடமானது பலதடவைகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன் முறையான இடக்கையிருப்பு மேற்கொள்ளப்பட்டுவிட்டது.

அவசர சிகிச்சைப் பிரிவுடன்கூடிய வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தின் அமைவிடத்தினை மாற்றுவது சாத்தியமான ஒன்றுதான் எனினும் இதனால் ஏற்படக்கூடிய மேலதிக செலவீனங்களான (பிரதான கட்டடத்துடன் இணைப்பது) முதலானவை ஒருபுறம் இருக்கஇ இவ்வாறு இடம் மாற்றுவது சில நடைமுறைச் சிக்கல்களுக்கு இட்டுச்செல்லலாம்.

தற்போது தீர்மானிக்கப்ட்டுள்ள இடமானது வெளிநோயாளர் பிரிவுக்கு மிகவும் அண்மையானது என்பதால் அது ஒரு அனுகூலமாகும்

இந்தச் செயற்திட்டமானது ஊவு ளஉயn மற்றும் பரிசோதனை அறையினைக் குறித்த கட்டடத்தொகுதியினுள் உள்ளடக்கியுள்ளதுடன்இ இந்த வசதிகள் முழு வைத்தியசாலையினால் பயன்படுத்தப்படலாம். ஏவு யானது பிரதான கட்டடத்திற்கு அருகில் இருப்பதே நோயாளர்களுக்கு வசதியானதாகும்.

எவ்வாறெனினும்இ புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இடத்தினை மாற்றுவது குறித்த கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கு நான் விரும்பவில்லை. இது விரும்பத்தகாத விளைவுகளுக்கான கதவுகளைத் திறக்கக்கூடும் என்பதுடன் இத்திட்டத்திற்கு ஆபத்தான தாமதங்களை ஏற்படுத்தவும்கூடும்.

(நெதர்லாந்தின்) நிதிஉதவிக்குப் பிரதான காரணிகள் வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையம் மற்றும் மருத்துவப் புனர்வாழ்வு மையம் (மாங்குளம்) ஆகிய இரண்டுமேயாகும். எனவே இவை இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதாவது 2025 இல் வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தினை இயக்குவதற்கு என்ன நடைமுறைச் சிக்கல்கள் தடையாக உள்ளதாக தற்போதுள்ள நிர்வாகம் கூறுகிறதோஇ அவற்றினை அப்போதே குறிப்பிட்டு — “ஏலவே பலசுற்று ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளின் பின்னர் தீர்மானிக்கப்பட்ட வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்திற்கான அமைவிடத்தினை தற்போது கட்டப்பட்டுள்ள இடத்திற்கு மாற்றினால் இவ்வாறாக நடைமுறைச் சிக்கல்கள் வரலாம்” — என நெதர்லாந்துப் பிரதிநிதி 21.02.2018 அன்றே மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளளர். அத்துடன் ‘வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தினை நிர்மாணிப்பதில் இடர்பாடுகள் வந்தால் நெதர்லாந்தின் உதவித்திட்டம் நிறுத்தப்படும் ஆபத்து உள்ளது’ என்பதனை வரிகளுக்கிடையே குறிப்பாலுணர்த்தியுள்ளனர். வெளிப்படையாகச் சொல்வதானால் நெதர்லாந்து அவ்வளவு இறுக்கமாக இல்லாதிருந்திருந்தால் வடமாகாணத்திற்கான விசேட மகளிர் சிகிச்சை மையமே இங்கு அமைக்கப்பட்டிருக்கமாட்டாது.

அது அவ்வாறிருக்க 2017 ஆம் ஆண்டில் பாதீட்டின் ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 2500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பரிந்துரை வழங்கப்பட்டும் அது தொடர்பில் இதுநாள்வரை எந்தத் தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் கிளிநொச்சி வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தியின் அடுத்தடுத்த அவத்தைகள் ஆரம்பிக்கப்படாமலே எட்டு வருடங்கள் — அல்லது இரண்டு பாராளுமற்றப் பதவிக் காலங்கள் — கடந்து போய்விட்டன.

அத்துடன்இ பாராளுமன்ற வீராவேச உரைகளோ மாகாணசபை மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுப் பிரேரணைகளோ அல்லது பிரதேச சபை மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழுப் பிரேரணைகளோ இல்லாது வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையம் மற்றும் அதனை உள்ளடக்கிய கிளிநொச்சி வைத்தியசாலையின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான முன்மொழிவு மாகாண மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய அலகுகளால் அங்கீகரிக்கப்பட்டு அவற்றிற்கான நிதி மூலங்கள் சில மாதங்களினுள் மின்னாமல் முழங்காமல் இனங்காணப்பட்டுவிட்டன. அதன் பிற்பாடு வெளிநாட்டு நிதியுதவியாளர்களுடன் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஆளணிகளை இந்த விசேட மகளிர் சிகிச்சை மையத்திற்குப் பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் தவறியுள்ளனர்.

இவையனைத்திற்கும் காரணமான சிலர் இவையெல்லாற்றிற்கும் ‘மத்தியின்’ மீது குற்றம் சுமத்திவிட்டுச் இருக்க வேறு சிலர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மைய ஆளணியினை நிரப்பும் பிரேரணையினை முன்வைத்துத் தொட்டிலை ஆட்டுகிறார்கள்.

எனது முன்னைய கட்டுரைக்கு என்னைக் கடிந்து கொண்ட ஒரு சிலர் ‘என்ன இதுபற்றி எதுவும் எழுதாமல் இருக்கிறீர்கள்? மக்களுக்கு நீங்கள் எழுதித்தான் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்’ எனக் கூறும்போது எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

இந்த நிலையில் “கடனாகப் பெறப்பட்ட பொதுநிதியில் வாங்கப்பட்டுள்ள பல மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்களைப் பயன்பாடில்லாமல் (னைநடiபெ ழக யஉஉநளவள) பழுதடையவிடுவது நிதிவிதிகளின் (குiயெnஉயைட சுநபரடயவழைளெ) படி குற்றமாகும். இந்தக் குற்றத்திற்காக பொறுப்பான அரச அதிகாரிகள் பாராளுமன்றக் குழு விசாரணைக்கு அழைக்கப்படலாம். இதனால் இவற்றினைப் பிற வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதனை ஜபடம் 15ஸ எவரும் குற்றம் சொல்லவோ அல்லது தடுக்கவோ முடியாது. கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து முன்னரும் மருத்துவ உபகரணங்கள் பலதடவைகள் நாட்டின் பிற வைத்தியசாலைகளுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்ட மற்றும் நாட்டின் வேறு வைத்தியசாலைகளிலிருந்து தற்காலிகமாக மருத்துவ உபகரணங்கள் பெறப்பட்ட வரலாறு இதற்கு உதாரணம்” என்று மாகாண சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் என்னிடம் விளக்கினார்.

(வடக்கில் உள்ள ஆதார வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மருத்துவமனையிலுள்ள உணர்விழப்பிக்கும் இயந்திரம் ஒன்றினைத் தற்காலிகமாகப் பெற்றுத் தருமாறு கோரிய கடிதம்).

எனவே இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது வடக்கு மாகாண ஆளுனர் அரசசார்பு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தற்போது செய்யவேண்டியவையாவன:
வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை மையத்தை அதன் மூல நோக்கத்திற்கு ஏற்பப் பயன்படுத்த அரசாங்கமும் அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான நகர்வுகளைத் தாமதமின்றி மேற்கொள்ளவேண்டும்.

இந்தத் திட்டம் தடம்புரண்டதற்குப் பொறுப்பான அனைவர் மீதும் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு திணைக்கள மட்ட மற்றும் பாராளுமன்றி பொது நிதிக் குழு ஆகியன விசாரணைகளை நடத்திஇ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக
2018 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் தீர்மானிக்கப்பட்ட இடஅமைவினை மாற்றுவதனால் வரக்கூடிய நடைமுறைச் சிக்கல்கள் குறித்து நிதிவழங்குனர்கள் வெளிப்படையாக எச்சரித்திருந்தும் அதனைக் கருத்திலெடுக்காது வைத்தியசாலைத் திட்டமிடல் குறித்த எந்த அனுபவமோ அல்லது அறிவோ அற்ற அரசியல்வாதிகளினதும் வெளியாரினதும் அழுத்தத்திற்குப் பணிந்து மாற்றிய சகல அரச அதிகாரிகளும் விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

2017 ஆம் ஆண்டில் பாதீட்டின் ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 2500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பரிந்துரை வழங்கப்பட்டும், இன்றுவரை அது தொடர்பில் தொடர் நடவடிக்கை எடுக்காத சகலர் மீதும் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டுக் கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்
கிளிநொச்சி வைத்தியசாலையின் மூலத் திட்ட மீளாய்வு வரைபடத்தினை கட்டணம் எதுவும் இன்றி கிளிநொச்சி பொறியியல் பீட வல்லுனர்கள் உருவாக்குவதனை இடைநிறுத்தக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

ஏறத்தாள மூன்று வருடங்களுக்கு முன்னரே இது குறித்துப் பகிரங்கமாக எச்சரித்த போதும் விழிப்படையாதுஇ ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஆளணிகளைத் தகுந்த நியாயப்பாடுகளுடன் கோரிப் பெறாதுவிட்ட சகல அதிகாரிகளுக்கும் தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

இம்மையம் வடமாகாண பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கடன் பெற்று உருவாக்கப்பட்ட பொதுச் சொத்தாகும். எனவேஇ அதன் உண்மையான நோக்கத்தை பேணுவது பொதுமக்களாகிய நம்முடைய தார்மீகப் பொறுப்பாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...

திருடனிடமிருந்து நகை திருடிய பொலிஸ்காரர் கைது!

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா...

தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்