ஒரு முழம் மல்லிப் பூவுக்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்

Date:

அவுஸ்​திரேலிய விமான நிலை​யத்​தில் ஒரு முழம் மல்​லிகை பூவுக்​காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்டுள்​ளது.

அவுஸ்​திரேலி​யா​வின் விக்​டோரியா மாகாண மலை​யாளி​கள் கூட்​டமைப்பு சார்​பில் கடந்த 6ஆம் திகதி மெல்​போர்ன் நகரில் ஓணம் பண்​டிகை கொண்​டாடப்​பட்​டது. இதில் கேரள நடிகை நவ்யா நாயர் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார்.

இவ்விழா​வில் பங்​கேற்​க அவுஸ்​திரேலி​யா​வின் மெல்​போர்ன் நகருக்கு நடிகை நவ்யா விமானத்​தில் சென்​றார். அப்​போது அவர் ஒரு முழம் மல்​லிகை பூவை கைப்​பை​யில் எடுத்​துச் சென்​றார். மெல்​போர்ன் விமான நிலை​யத்​தில் நடிகை நவ்​யா​வின் உடைமை​களை அந்த நாட்டு அதி​காரி​கள் சோதனை செய்​தனர். அப்​போது அவரது கைப்​பை​யில் ஒரு முழம் மல்​லிகை பூ இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதற்​காக அவருக்கு ரூ.1.14 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது.
இதுகுறித்து நவ்யா நாயர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: எனது அப்​பா, இரண்டு முழம் மல்​லிகை பூவை வாங்​கி​னார். அந்த பூவை இரு துண்​டு​களாக வெட்டி என்​னிடம் தந்​தார்.

நான் கொச்​சி​யில் இருந்து சிங்​கப்​பூர் சென்று அங்​கிருந்து மெல்​போர்ன் சென்​றேன். எனவே சிங்​கப்​பூர் செல்​லும் வழி​யில் ஒரு முழம் பூவை சூடிக் கொண்​டேன்.

மெல்​போர்ன் விமான நிலை​யத்​தில் நடை​பெற்ற சோதனை​யின்​போது மல்​லிகை பூவை அதி​காரி​கள் கண்​டு​பிடித்​தனர். அந்த நாட்டு சட்ட விதி​களின்​படி மல்​லிகை பூவை கொண்டு செல்​வதற்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. எனவே எனக்கு ரூ.1.14 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. இந்த தொகையை 28 நாட்​களுக்​குள் செலுத்த காலஅவ​காசம் வழங்​கப்​பட்டு இருக்​கிறது. இவ்​வாறு நடிகை நவ்வா நாயர் தெரி​வித்​துள்​ளார்.

spot_imgspot_img

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆவது ஆண்டு...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்