அம்பாறையில் நீதிகோரிய கையெழுத்து போராட்டம்

Date:

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டத்தை வியாழக்கிழமை(4) மாலை கிழக்கில் அம்பாறை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்த இந்தக் கையெழுத்து போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன் , முருகேசு சந்திரகுமார் , சுரேஷ் பிரேமசந்திரன், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் ஹென்றி மகேந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் செயலாளரும் கல்முனை தொகுதி இணைப்பாளருமான அருள். நிதான்சன், சமூக சேவையாளர் இரா. பிரகாஷ் உட்பட தமிழ் தேசிய கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்வமாகக் கையெழுத்து இட்டனர்.

-பாறுக் ஷிஹான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்