விஜய்யின் கருத்தை நாம் பொருட்படுத்தவே இல்லை-அமைச்சர் விஜித ஹேரத்

Date:

கச்சத்தீவை ஒருபோதும் நாம் இந்தியாவிற்கு கொடுக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தென்னிந்தியாவில் தேர்தல்காலம். எனவே இப்டி பல கருத்துக்களை கூறுசார்கள். ஆனால் இவ்வாறான கருத்துக்களை நாம் பொருட்டுத்தப்போவதேயில்லை. கச்சதீவை இந்தியாவிற்கு கொடுத்தல் ஒரு போதும் நடைபெறாத செயல் என அவர் தெரிவித்தார்.

கச்சத்தீவை மீட்டு தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்த விடயம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்