சுமந்திரன் ஒரு  விலாங்கு மீன் என கூறிய மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர்!

Date:

ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார்

யாழ்.ஊடக அமையத்தில் இன்று(27.08.2025) இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில் –

ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படுவது அவரது சுயநலத்தையும் பெற்றுக் கொண்ட பணப்பெட்டிக்காகான விசுவாசத்தையும் காட்டுகின்றது.

நல்லாட்சி காலத்தில் ரணிலுக்கு முண்டு கொடுத்து ஆட்சியில் நிழல் ஆட்சியாளர்களாக இருந்த இவர்கள் அன்றும் ரணிலைக் கொண்டு தமது தேவைகளையே நிவர்த்தி செய்து இலட்சாதிபதியாகினர்.

தற்போது ரணில் கைதானவுடன் அனைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடுதலைக்காக போராடுகின்றனர்.

இது உழல்வாதிகளான தமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இருக்கின்றது.

அந்தவகையில் ரணிலின் விடுவிப்பில் அவரது நோயின் தன்மையே தாக்கத்தை செலுத்தியது.

எனவே மக்களின் நலன்களையும் அவர்களது சொத்துக்களையும் யார் துஷ்பிரயோகம் செய்தாலும் அவர்களுக்கு இந்த ரணிலின் கைது பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்