பார் பொமிற் அணி குமுறல்!

Date:

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி ஆரம்பிக்கவுள்ள கையெழுத்து போராட்டத்தில் தமக்கு அழைப்பு விடுக்காததால் கொந்தளித்து போயுள்ளது மணிவண்ணன் குழு.

இன்று யாழ் ஊடக அமையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் மணிவண்ணன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் –

தமிழ் மக்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுக்காமையானது தேசியப் பரப்பில் பயணிப்பவர்கள் என்று கூறி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று கையெழுத்து போராட்டம் மேற்கொள்ள முயற்சிப்பவர்களின் தேசியக் கொள்ளைக்கு எமது நிலைப்பாடு ஒத்துவராதென நினைத்திருக்கலாம். அவர்கள் கூட்டு என்ற போர்வையில் எதை சாதிக்க முயல்கின்றார்கள் என தெரியவில்லை.

நேற்றையதினம் கூடிய கூட்டுக்குள் பல கட்சிகளின் பிரதிநிதிகள் இராணுவத்துடன் இணைந்து ஒட்டுக்குழுவாக பல்வேறு மோசமான செயற்பாடுகளை செய்தவர்கள் என்பதை மக்கள் அறிவர்.

அதன்படி இதில் உள்ள அவர்களில் சிலர் செம்மணி உள்ளிட்ட பல கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களாகவும் இருக்கும் நிலை உருவாகலாம்.

எனவே இவர்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டம் எந்தளவு வெளிப்படையானதாகவும் உணர்வூர்வமானதாகவும் இருக்கும் என்பது தெரியாது.

இதேவேளை குறித்த போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள் உண்மையானவர்களாக இல்லாது போனாலும் போராட்டம் அவசியமானது.

அந்தவகையில் போராட்டத்தின் வலுவாக்கலுக்கு எமது கட்சியின் ஆதரவு என்றும் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ரணில் ஆட்சியில் ஏழைப்பெண்ணுக்கு வாழ்வாதாரமாக மதுபானச்சாலை உரிமை வழங்கியது மணிவண்ணனின் கட்சியென்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்