சுமந்திரனின் கதவடைப்புக்கு ஆதரவில்லை: யாழ் முதல்வரின் முகத்திலறைந்தால் போல கூறிய யாழ் வர்த்தகர்கள்!

Date:

முத்தையன்கட்டில் இராணுவத்தினருக்கு கஞ்சா, கசிப்பு கொடுத்து, முகாமிலிருந்த பொருட்களை திருடிய இளைஞர்களில் ஒருவர் இராணுவத்திடமிருந்து தப்பியோடிய போது குளத்தில் காணாமல் போய், பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த கதவடைப்புக்கு ஆதரவளிக்கமாட்டோம் என யாழ்ப்பாண வர்த்தகர் சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாநகரசபை முதல்வர் வி.மதிவதனி இன்று யாழ். வர்த்தகர் சங்கத்தினரை சந்தித்து பேசிய போது, முதல்வரிடம் முகத்திலறைந்தாற் போல வர்த்தகர்கள் இதனை தெரிவித்தனர்.

அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து கதவடைப்பு அறிவிக்கப்படவில்லை, கதவடைப்பினால் நாளாந்த கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள், வர்த்தகர்களின் வர்த்தகம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், வெளிநாட்டவர் வரும் சமயத்தில் வர்த்தகம் ஓரளவு நடைபெற்று வரும் நிலையில் கதவடைப்பை மேற்கொள்வது பொருத்தமற்றது என பல காரணங்களை கூறி, கதவடைப்பை ஆதரிக்க முடியாது என தெரிவித்தனர்.

இதன்போது, யாழ்ப்பாண முதல்வருக்கும், வர்த்தகர்களுக்குமிடையில் காரசாரமான வார்த்தைப் போரும் நடந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தனது சோதிடருக்கு அரசு நியமனம் வழங்கிய விஜய்: சந்தி சிரிக்கும் முடிவை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்!

தமிழக முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்...

விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து...

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்