செம்மணியில் மீட்கப்பட்ட சான்றுகளை பார்வையிட்டு அடையாளம் காண அழைப்பு!

Date:

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து, அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, அகழ்வுப்பணிகளின்போது, மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் பொதுமக்களின் அடையாளப்படுத்தலுக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனிதக்கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்குச் செய்த விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய, செம்மணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் 2025 ஓகஸ்ட் 05ஆம் திகதி பிற்பகல் 1:30 முதல் மாலை 5 மணிவரை குறித்த உடைகள் மற்றும் பிறபொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அவற்றைப் பார்வையிட்டு, அதிலுள்ள பொருட்களை அடையாளம் காணும்பட்சத்தில், நீதிமன்றுக்கு அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, அறிவித்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்