மாதா கோயிலில் அடாவடியில் ஈடுபட்ட ஜேவிபி பிரமுகர் உள்ளிட்டவர்களுக்கு தடுப்புக்காவல்!

Date:

மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சுருவத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 14 நாள்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சுருவத்தை 20 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த 25 ஆம் திகதியன்று நிறை போதையில் உடைத்து சேதப்படுத்தியதாக குறித்த ஆலய நிர்வாகத்தினரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 8 பேர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். எஞ்சியோர் தப்பிச்சென்றிருந்த நிலையில் பொலிசர் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் வகையில் நேற்றையதினம் ( 27) ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிவான் முன்னெலையில் பொலிசார் முன்னிலைப் படுத்தியிருந்தனர்.

இதன்போது ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிவான் குறித்த 8 நபர்களையும் எதிர்வரும் 14 நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடிருந்தார் .

தனிமைத் தீவாக இருக்கும் குறித்த ஆலய. சூழலில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய குழுவினர் மதுபான விருந்தொன்றை நடத்திக் கொண்டிருந்த நிலையில் ஆலயத்திற்கு சுற்றிலா சென்றவர்களுடன் முரண்பட்டுக்கொண்ட காட்சிகளுடன் அதிகளவான மதுப்போத்தல்கள், ஆடு ஒன்றின் தலை உள்ளுட்ட பல்வேறு தடயங்களும் வெளியாகியிருந்தமை குறிப்புடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்