பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை அங்கீகரித்த அரசியலமைப்பு சபை

Date:

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை சமீபத்தில் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பித்தார்.

அதன்படி, இன்று கூடிய அரசியலமைப்பு சபையினால் ஜனாதிபதியின் பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டது.

பிரீத்தி பத்மன் சூரசேன நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுள்ளார். மேலும் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதியாகவும், பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான விசாரணை குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போதைய பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ எதிர்வரும் 27ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...

ஹிரு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஹிரு மீடியா நெட்வொர்க் மற்றும் ஆசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிரைவேட் லிமிடெட்)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்