பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள் மடக்கிப்பிடிப்பு

Date:

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் (15) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமை இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்தபோது, இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர் குறித்த பெண்ணை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுண் தங்க சங்கலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஊர்மக்கள் இணைந்து கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து நையப்புடைத்து, முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

32, 22 வயதுடைய தர்மபுரம் விசுவமடு பகுதியினை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...

ராஜபக்சக்களின் வழியிலேயே அநுரவும்

ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச்...

ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியதாக ட்ரம்ப் அறிவிப்பு

பல மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்