பெயர், ஊர் தெரியாத ரிக்ரொக் காதலனால் கர்ப்பமான 15 வயது சிறுமி!

Date:

ரிக்ரொக் மூலம் அடையாளம் காணப்பட்ட பெயரோ, முகவரியோ தெரியாத காதலன் மூலம், 15 வயது சிறுமி கர்ப்பமாக்கிய சம்பவம் குறித்து வடக்கு களுத்துறை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடக்கு களுத்துறை காவல் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமி, ஜனவரி மாதம் ரிக்ரொக் மூலம் ஒருவரை அடையாளம் கண்டுள்ளார். அந்த இளைஞன், பெப்ரவரி  மாதம் தனது வீட்டிற்கு வந்து, இருவரும் காதல் உறவில் இருப்பதாகவும், அதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாகவும் தனது பெற்றோரிடம் பேசியதாகவும், அவர் தனது வீட்டில் இரவைக் கழித்ததாகவும் சிறுமி கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடந்த 10 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக தனது தந்தையுடன் ஹொரணை ஆதார மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த ரிக்ரொக் காதலனின் முழுப் பெயரோ முகவரியோ தனக்குத் தெரியாது என்று சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்