போதையில் பாடசாலை பேருந்தை செலுத்திய சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

Date:

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாடசாலைப் பேருந்து சாரதிக்கு இரண்டு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது கந்தளாய் தலைமை நீதவான் நீதிமன்றம்.

கந்தளாய் தலைமை நீதவான் டி.பி.ஜி. சந்தரகேக, எல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதான குற்றவாளிக்கு, ஒரு வருட காலத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ததுடன், ரூ. 30,000 அபராதமும் விதித்தார்.

இந்த வாரம் பாடசாலை மாணவர்களை எல்லவிலிருந்து திருகோணமலைக்கு கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்றிச் சென்றபோது சாரதி குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டது.

தம்பலகாமத்தில் உள்ள போலீஸ் நடமாடும் ரோந்துப் பிரிவினால் பேருந்தை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சாரதி குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டது.

பொலிசார் அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்து, மாணவர்கள் தங்கள் சுற்றுலாவைத் தொடர மற்றொரு சாரதியை வழங்கினர்.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்