தமிழ் அரசு கட்சியின் மன்னார் பொருளாளர் பதவி விலகல்

Date:

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு இன்று (01) எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் மாவட்டத் தலைவர், நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் என்ற வகையில் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்டத் தலைமை கடந்த தேர்தலில் தன்னிச்சையாகச் செயற் பட்டதுடன், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அலட்சியமாகச் செயற்பட்டமை, கட்சிக்கும் மன்னார் மாவட்டத்திற்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தற்போதைய மாவட்ட தலைமையுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்கள் மத்தியில் பல்வேறு வகையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், தோல்வி மற்றும் பின்னடைவுக்கு தார்மீக பொறுப்பேற்று, பொருளாளர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர், செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்