போலி பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள், நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் குடிவரவுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டனர்.
அபுதாபிக்குச் செல்லவிருந்த எதிஹாட் ஏர்வேஸ் EY-397 விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலைய முனையத்திற்கு வந்திருந்தனர்.



