கதிர்காமத்தை சென்றடைந்த பாதயாத்திரை!

Date:

கதிர்காமத்துக்கு 5 தினங்களாக காட்டுவழியாக பாத யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் இன்று வியாழக்கிழமை (25) கதிகாமத்தை சென்றடைந்தனர்.

கதிர்காம முருகப் பெருமான் ஆலைய கொடியேற்றத்தையிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை வைத்து யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலையத்தில் இருந்து கதிர்காம முருகப் பெருமானுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். சுமார் 850 கிலோமீற்றர் தூரமுள்ள இந்த பாதையை சுமார் 45 நாட்கள் யாத்திரையாக  சென்று சென்று நேத்திகடனை முடித்து ஆலையத்தை தரிசிப்பது வழமை.

இந்த வகையில் யாழ் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் ஆரம்பித்த பாதை யாத்திரை குழுவினர் கிழக்கு மாகாணம் பாணமை உகந்தமலை முருகன் ஆலையத்தை கடந்த 19 திகதி சென்றடைந்தனர்.

உகந்தயில் இருந்து கதிர்காமத்துக்கான காட்டுவழிபாதை கடந்த 20 திகதி வெள்ளிக்கிழமை சம்பிராய பூர்வமாக திறக்கப்பட்டு 5 தினங்களாக காட்டுவழியாக ஊடாக ஆரயிக்கணக்காண பக்தர்கள் பாதையாத்திரையாக இன்று வியாழக்கிழமை (26) கதிர்காம முருகன் ஆலையத்தை சென்றடைந்தனர்.

இதேவேளை காட்டுவழிபாதை எதிர்வரும் 4ம் திகதி பூட்டப்படும்.

காட்டுவழி பாதையில் பாதையாத்திரைகள் குடிப்பதற்காக தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமத்தை மேற்கொண்டதாகவும் இவ்வாறான நிலையில் ஒருபோதும் இடம்பெறவில்லை இவ் முறை இடம்பெற்றதாகவும் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் கவனம்செலுத்தத வேண்டும் என் பாதயாத்திரை பக்தர்கள் கடும் கவலை தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்