இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவுக்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெஹ்ரானின் உடன்பாட்டை உறுதிப்படுத்தியதாக, பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க ஆதாரத்தை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய அதிகாரிகளுடனான ஒரு தொலைபேசி உரையாடதை தொடர்ந்து கத்தார் பிரதமர் இந்த உடன்பாட்டை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கத்தார் அமீரிடம் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், தெஹ்ரானையும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வற்புறுத்த தோஹாவின் உதவியைக் கேட்டதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த தொலைபேசி அழைப்பு வந்தது என்று அந்த அதிகாரி கூறினார்.
திங்கள்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானத் தளமான அல் உதெய்டை ஈரான் தாக்கிய பின்னர் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.




