இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பிரபல நரம்பியல் வைத்திய நிபுணர்: பின்னணி என்ன?

Date:

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் மகேஷி விஜேரத்னவை ஜூன் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கூற்றுப்படி, டொடாக்டர் விஜேரத்னவும் மேலும் இருவரும் தனது தனியார் மருத்துவ நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு அதிக விலைக்கு சில மருந்துகளை விற்றதாகவும், அதே நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அந்த மருந்துகளை வேண்டுமென்றே வாங்கத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூறப்படும் திட்டம் நோயாளிகளுக்கு ரூ. 30 மில்லியன் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக ஆணைக்குழு கூறியது.

கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு போலி மருத்துவ ஆவணங்கள் வழங்கி, அவருக்கு மருத்துவ மறைப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, டொக்டர் விஜேரத்ன மீது முன்னர் குற்றம் சாட்டப்பட்டியிருந்தார். துமிந்தவின் மூளைக்காயத்தை ஊதிப்பெருப்பித்த அந்த போலி அறிக்கையின் காரணமாகவே, முன்னர் துமிந்த விடுதலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்